ETV Bharat / bharat

பரீக்ஷா பே சர்ச்சா 2024: பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரதமர் மோடி! - மோடி பேச்சு

Pariksha Pe Charcha 2024: தேர்வு சமயத்தில் பள்ளி மாணவர்கள், மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி, அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுக்கு 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் இன்று ஆலோசனைகள் வழங்குகிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Jan 29, 2024, 11:03 AM IST

Updated : Jan 29, 2024, 11:29 AM IST

டெல்லி: 'பரீக்ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதற்காகவும், தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்வு எழுத உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.29) கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.

2018ஆம் ஆண்டு முதல் 'பரீக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பிரதர் மோடி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடையே கலந்துரையாடி வருகிறார். தேர்வு நேரத்தில் அனைவரிடமும் எழும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி அணுகுவது, அவற்றை எப்படி களைவது என்பன குறித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

ஆண்டுதோறும் பல லட்சம் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த தேர்வு மட்டுமில்லாமல் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை பிரதமர் மோடி இந்த பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி மூலம் உரையாடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சி ஏழாவது ஆண்டாக இன்று நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 6-லிருந்து 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இதில் பங்கேற்று நேரடியாக பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் https://innovateindia.mygov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப வேண்டும். அப்போது, 500 வார்த்தைகளுக்கு மிகாமல் தங்களது கேள்விகளை பிரதமர் மோடிக்கு அனுப்ப வேண்டும். ஜன.12ஆம் தேதிக்குள் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் பின்னர், இந்நிகழ்ச்சி எங்கு? எப்போது? நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் தகவல் வெளியிடும். இது தொடர்பாக X வலைத்தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ' #ParikshaPeCharcha 2024-க்கு இன்னும் 4 நாட்கள் உள்ளன ! 29 ஜனவரி 2024 அன்று, மாண்புமிகு பிரதமர் @நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பழகுவார்கள், தேர்வுகள், மன அழுத்தம், பதட்டம் அல்லது நேர மேலாண்மை பற்றிய பரிந்துரைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கான சில நடைமுறை குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வார்கள்! #PPC2024' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://innovateindia.mygov.in/ppc-2024/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர், அதனுள் லாக் இன் செய்து முன்பதிவு செய்யலாம். அந்தவகையில், இந்தாண்டு பள்ளி மாணவர்கள், ஆசிரியகள் மற்றும் பெற்றோர்கள் என 2.50 லட்சம் பேர் இப்போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளையும் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ஜனவரி 30 ஆம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவித்திடுக" - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல்

Last Updated : Jan 29, 2024, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.