மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் இருந்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடசிவ சேனா உத்தவ் அணியைச் சேர்ந்த தலைவர் சுஷ்மா அந்தாரே ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டமிட்டு உள்ளார். அதன்படி ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை குழைந்து போனது.
விமானி எவ்வளவு முயற்சித்தும் பழைய நிலைக்கு திரும்பாத ஹெலிகாப்டர் தரையில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானிக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் ஹெலிகாப்டரில் உள்ள ரோடர் பிளேடுகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக சிவ சேனா தலைவருக்கு எதுவும் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ஹெலிகாப்டரில் செல்ல இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடையே சற்று பீதியை கிளப்பி உள்ளது. ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக என்ன காரணம் என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டரும் இதே போல் வானில் பறக்க இருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழ்ந்து கடுமையாக குலுங்கிய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.
தரையில் இருந்து எழுப்பிய ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பலத்த காற்று காரணமாக நிலை தடுமாறிய ஹெலிகாப்டரை, மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்த விமானி தொடர்ந்து வானை நோக்கி செலுத்தினார். சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், பின்னர் சீராக இயங்கியதால், அதிர்ஷ்டவசமாக அமித் ஷா உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: டெல்லி காவல் தலைமையகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்! ட்விஸ்ட் கொடுத்த சம்பவம்! - Delhi Police Bomb Threat