புதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் இருந்து பணநோட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்ததையடுத்து அவையில் அதுகுறித்து கூச்சம் குழப்பம் நேரிட்டது.
நாடாமன்றத்தின் இரு அவைகளும் 9ஆவது நாளாக இன்று வழக்கம்போல் கூடின. மக்களவை தலைவர் ஓம்பிர்லா மக்களவைக்குள் வந்ததும், இருக்கையில் இருந்து எழுந்த காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், பாஜகவின் நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா,"அவையின் கண்ணியத்தை பாதுகாப்பதில் சமரசம் இல்லை, கேள்வி நேரம் தொடங்குவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?"என்று கேட்டார். எனினும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைகளில் அமராமல் கோஷமிட்டபடி இருந்தனர். மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு முக கவசம் அணிந்து வந்திருந்தனர். அதில் மோடி, அதானி நண்பர்கள் என்பதை குறிக்கும் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து அவை தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் ஒரு மணி நேரம் வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் கைப்பற்றப்பட்ட பணம்: மாநிலங்களவை கூடியதும் பேசிய அவை தலைவர் ஜகதீப் தன்கர்,"மாநிலங்களவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டதும், நாசவேலையில் ஈடுபடும் வகையில் பொருட்கள் அவைக்குள் இருக்கிறதா என்பது குறித்து வழக்கமாக சோதனை செய்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கை எண் 222ல் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த இருக்கை தெலங்கானாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,"என்றார்.
Chaos erupted in the upper house after Rajya Sabha Chairman Jagdeep Dhankhar on Friday informed the house that a wad of cash was found on a seat belonging to Congress leader Abhishek Manu Singhvi by secruity officials.#JagdeepDhankar #ParliamentWinterSession #AbhishekManuSinghvi pic.twitter.com/2mr6pNDDdP
— ETV Bharat (@ETVBharatEng) December 6, 2024
இதன் பின்னர் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே,"இந்த விஷயம் குறித்து விசாரணை செய்யப்படலாம். ஆனால், இது குறித்து விவாதிக்க தேவையில்லை,"என்று கூறினார்.அவரது பேச்சுக்கு ஆளும் பாஜக கூட்டணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர்,"எதிர்கட்சித் தலைவர் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தத் தேவையில்லை என்கிறார். என்னுடைய சந்தேகம்,அந்த காங்கிரஸ் உறுப்பினர் அவைக்கு வந்தாரா இல்லையா என்பதுதான். மாநிலங்களவையில் பராமரிக்கப்படும் டிஜிட்டல் ஆவணங்களின் படி அவர் கையெழுத்திடுவதற்காக அவைக்கு வந்திருக்கிறார்,"என்று குறிப்பிட்டார்.
கூச்சல் குழப்பம்: அப்போது ஆளும் கட்சிகள் தரப்பில் இருந்தும் பதிலுக்கு எதிர்கட்சிகள் தரப்பில் இருந்தும் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது திமுக எம்பி திருச்சி சிவா பேசுவதற்காக எழுந்து நின்றார்.அவருக்கு அவை தலைவர் அனுமதி அளித்தார் அப்போது பேசிய திருச்சி சிவா, "இந்த அவை முழுக்க முழுக்க மாநிலங்களவை தலைவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், மத்திய அமைச்சர் ஆளும் கட்சி எம்பிக்களை கூச்சம் குழப்பம் செய்யும்படி தூண்டுகிறார்," என்று கூறினார்.இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய திருச்சி சிவா,"நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.இது நியாமல்ல. இது நடந்தது, ஏன் தேவையில்லாமல் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கு முயற்சிக்கிறீர்கள்,"என்றார். இதன் பின்னர் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, "எந்த இருக்கையில் இருந்தது. அந்த இருக்கையின் எம்பி பற்றி அவை தலைவர் சொல்கிறார்.அதற்கு ஏன் நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்? நோட்டுக்கட்டுகளை அவைக்கு எடுத்துவருவது தேவையில்லாத ஒன்று,"என்றார்.
இதன் பின்னர் பேசிய எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே,"இந்த விஷயம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள்.அப்புறம் ஏன் இந்த நோட்டுகள் எங்கிருந்து கைப்பற்றப்பட்டது. அந்த இருக்கைக்கு உரியவர் யார் என்பதை அவைக்கு தெரிவிக்கிறீர்கள்?
Heard of it first time now. Never heard of it till now! I carry one 500 rs note when I go to RS. First time heard of it. I reached inside house at 1257 pm yday and house rose at 1 pm; then I sat in canteen till 130 pm with Sh Ayodhya Rami Reddy then I left parl!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) December 6, 2024
இந்த நிலையில் இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அபிஷேக் மனு சிங்வி,"இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்பட்டேன். இது வரை கேள்விப்பட்டதே இல்லை! நான் மாநிலங்களவைக்கு செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்துச் செல்கிறேன். நான் மதியம் 1257 மணி வரை அவையில் இருந்தேன். பின்னர் மதியம் 1 மணிக்கு நாடாளுமன்ற கேன்டீன் சென்றேன். அங்கு அயோத்தி ராமி ரெட்டியுடன் மதியம் 1.30 மணி வரை கேண்டீனில் அமர்ந்திருந்தேன். நீங்கள் முழுமையாக விசாரணை செய்தால் என்னை மேற்கோள் காட்டுங்கள்,"என்று கூறியிருக்கிறார்.