ETV Bharat / bharat

பிரியங்கா எம்பியாக பதவி ஏற்பு... நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மூன்றாவது நாளாக நடந்தது என்ன?

வயநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரியங்கா மக்களவையில் எம்பியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை  தலைவர் ஜகதீப் தன்கர் அவையை ஒத்தி வைத்து விட்டு வெளியேறுகிறார்
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அவையை ஒத்தி வைத்து விட்டு வெளியேறுகிறார் (Image credits-Sansad.in)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 12:41 PM IST

புதுடெல்லி: வயநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி வத்ரா மக்களவையில் எம்பியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்றாவது நாளாக இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவையில் அவை கூடியதும் புதிதாக அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. வயநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி வத்ரா, நான்டெட் தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திர வசந்தராவ் சவான் ஆகியோர் எம்பிக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு முடிவடைந்ததும் இருக்கைகளில் இருந்து எழுந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அதானியின் மீதான அமெரிக்க வழக்கு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களை சபாநாயகர் ஓம்பிர்லா அமைதி்பபடுத்த முயன்றார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து முதலில் மக்களவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை" - இராமதாசு பதில்!

மக்களவை ஒரு மணி நேரம் கழித்து நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு என சொந்த விதியை ஏற்படுத்திக் கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடையூறு செய்கின்றனர்," என்று கூறினார். எனினும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கூச்சம் குழப்பம் முடிவுக்கு வரவில்லை என்பதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்தி வைப்பு தீர்மானம்: கவுதம் அதானி மற்றும் அதானி குழுமம் ஆகியவற்றுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்தி வைப்பு தீர்மானம் குறித்து நோட்டீஸ் வழங்கி உள்ளது. குறிப்பாக மாநிலங்களவையில் பிற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விதி 267ன் கீழ் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட 16 பேர் நோட்டீஸ் அளித்திருந்தனர். இந்த நிலையில் மாநிலங்களவை இன்று கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அவையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார்.

பின்னர் மாநிலங்கள் அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு மாநிலங்களவை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அளி்ததிருந்த 16 நோட்டீஸ்களையும் ஏற்க முடியாது என ஜகதீப் தன்கர் தள்ளுபடி செய்து விடடார். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவைத் தலைவர் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

இதனிடையே இந்த கூட்டத்தொடரில் வக்ஃபூ திருத்த சட்டம் தாக்கல் செய்யப்படமாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. வக்ஃபூ திருத்த சட்டம் குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால், அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு நாள் வரை அவகாசம் அளிக்கும்படி முன்மொழிவை தாக்கல் செய்ய உள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.