ETV Bharat / bharat

கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்.. முழு பட்டியல்! - நடிகை வைஜெயந்திமாலா

Padma awards 2024: குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மறைந்த நடிகர் கேப்டர் விஜயகாந்த், நடிகை வைஜெயந்திமாலா, பழம்பெரும் நாதஸ்வரக் கலைஞர் ஷேஷம்பட்டி டி சிவலிங்கம், நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட 7 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Jan 26, 2024, 8:53 AM IST

Updated : Jan 26, 2024, 9:33 AM IST

டெல்லி: நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு இவை வழங்கப்பட்டு வருகின்றன.

மிக அரியவகையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷண் விருதும், மிக உயரிய தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷண் விருதும், குறிப்பிட்ட துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.

அந்தவகையில், 2024, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் வைஜெயந்திமாலா, பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதும், நடிகர் விஜயகாந்துக்கு கலைத்துறையில் பத்ம பூஷண் விருதும், விளையாட்டு, கலை உள்ளிட்ட பிரிவுகளில் பத்மஸ்ரீ விருது நான்கு பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு(74), நடிகை வையஜெயந்தி மாலா(90),தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி(68), சென்னையைச் சோ்ந்த பரதநாட்டிய கலைஞா் பத்மா சுப்பிரமணியம்(80), பீகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வர் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், கோவையைச் சோ்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலைஞா் எம்.பத்ரப்பனுக்கு(87) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முருகன், வள்ளி கதைகளை பாட்டு மற்றும் நடனத்தை கலந்து சிறப்பாக வெளிப்படுத்தும் வள்ளி ஒயில் கும்மியாட்டம் நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூக பிரச்னைகளை எடுத்துரைத்தவர். மேலும், ஆண்களுக்கான கலையாக கருத்தப்பட்ட வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலையை பெண்களுக்கும் கற்றுத் தந்து, சிறப்பான பயிற்சியளித்து கும்மி நடனத்தில் பெண்களை சிறந்து விளங்க செய்துள்ளார். இந்நிலையில், இவர் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்.

அதேபோல், தமிழக முன்னாள் ஆளுநராக இருந்த உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி எம்.பாத்திமா பீவி, மேற்கு வங்கத்தை சேர்ந்த பாடகி உஷா உதுப், இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளா் ஜோ டி குரூஸ், தமிழ்நாட்டை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சேஷம்பட்டி டி சிவலிங்கம், இலக்கியம் மற்றும் கல்வி - பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கிய மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீ குந்தன் வியாஸ், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு, மிஸோரமின் சமூக ஆா்வலா் சங்தாங்கிமா, கர்நாடகாவைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் கேரளா மாநிலம் காசா்கோட்டைச் சோ்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சா்வதேச மல்லா்கம்பம் பயிற்சியாளா் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே உள்ளிடோர் என மொத்தம் 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கோவை சேர்ந்த நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு..!

Last Updated : Jan 26, 2024, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.