ரஜோரி (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரின் உளவுத்துறை மற்றும் இந்திய ராணுவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் நேற்று (செப்.08) நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இரண்டு ஏகே47 (AK47) துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இராணுவத்தின் விரைவான இந்த நடவடிக்கையானது, பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வையும், தயார்நிலையையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
OP KANCHI
— White Knight Corps (@Whiteknight_IA) September 9, 2024
Based on inputs from intelligence agencies and @JmuKmrPolice regarding a likely infiltration bid, an anti-infiltration Operation was launched by #IndianArmy on the intervening night of 08-09 Sep 24 in general area Lam, #Nowshera.
Two terrorists
have been neutralised… pic.twitter.com/Gew0jtbpwI
இந்த நிலையில், ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் (White Knight Corps) படைப்பிரிவு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கமான 'X' தளத்தில், "புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையானது நடத்தப்பட்டது.
நவ்ஷேராவில் உள்ள லாம் பகுதியில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு, இரண்டு ஏகே47 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அப்பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று பதிவிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மணிப்பூரில் மீண்டும் மோதல்.. ராக்கெட் குண்டுகள் தாக்குதலில் 5 பேர் பலி!