பத்தனம்திட்டா: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை, சித்திரை விசு உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதிலும், கடந்த சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டத்தினால் போக்குவரத்து காவல் துறையினர் உள்பட பலரும் பெரும் சிக்கலைச் சந்தித்தனர்.
இந்த நிலையில், அடுத்த சீசன் முதல் சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் கிடையாது எனவும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் புக் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மொபைல் சூடாகிறதா? காரணம் என்ன? சரி செய்வது எப்படி? தெரிந்துகொள்ளுங்கள்.! - How To Solve Phone Overheating