ETV Bharat / bharat

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியா? நினைத்து கூட பார்க்க முடியாது! - காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் திடீர் பல்டி! - INDIA Bloc

மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கியமான தூண் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

jairam ramesh
jairam ramesh
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 3:25 PM IST

Updated : Jan 26, 2024, 2:12 PM IST

போங்கைகான் : மேற்கு வங்க முதலமைச்சர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்து கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் எதிர்வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மம்தா பானர்ஜியின் இந்த திடீர் அறிவிப்பால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதா என்ற சந்தேகம் நிலவியது.

மேற்கு வங்கத்தில் தனித்து போராடுவோம் என்று தான் தொடர்ந்து கூறி வந்ததாகவும், நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி தனக்கு கவலை இல்லை ஆனால் தங்கள் தரப்பு மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்கத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேலும், இந்தியா கூட்டணியில் தொடர்ந்தாலும் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் மேற்கு வங்கம் வழியாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை செல்வது குறித்து யாரும் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் மம்தா குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், காங்கிரஸ் கட்சியுடன் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மம்தா பானர்ஜி விரும்பவில்லை என்றும் காங்கிரஸ்க்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க மம்தா பானர்ஜி விரும்பிய நிலையில், அவர்கள் தரப்பில் இருந்து 10 முதல் 12 தொகுதிகள் கோரிக்கையாக வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜியின் இந்த திடீர் அறிவிப்பை அடுத்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தயவில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் போட்டியிடாது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அடுத்தடுத்த காரசார விவாதங்களால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இல்லாத கூட்டணியை நினைத்து கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

அசாம் மாநிலத்தின் வடக்கு சலமரா பகுதியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முக்கியமான தூண் போன்றது என்று கூறினார்.

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும், மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளும் என்றும் அனைவரும் தேர்தலில் பங்கேற்பார்கள் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் அடுத்தடுத்த கருத்துகளால் இந்தியா கூட்டணியில் நிலவுவது என்ன என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதைம் படிங்க :மக்களவை தேர்தலில் தனித்து போட்டி - மே.வங்கம் முதலமைச்சர் மம்தா அதிரடி அறிவிப்பு! காங்கிரஸ் பதிலடி என்ன?

Last Updated : Jan 26, 2024, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.