அயோத்தி (உத்தரப் பிரதேசம்): அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில், கைலாசா நாட்டில் தலைமறைவாகி வசிப்பதாக கூறப்படும் நித்தியானந்தா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்று (ஜன.22) வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மிக்க நிகழ்வை இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டிலுள்ளவர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த விழாவையொட்டி, அயோத்தி நகரத்தையே அரசு உலகத்தரத்தில் மாற்றி அமைத்துள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பொருட்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
-
Akila Bharata Hindu Maha Sabha, Salem Tharamangalam Mandal President, Mr. Sivakumar, formally invites THE SPH for the opening ceremony of the Ayodhya Ram Janmabhūmi Temple.
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mr. Sivakumar visited KAILASA Salem and presented Akshatha from Ayodhya.
KAILASA thanks Mr. Sivakumar and… pic.twitter.com/2EjhkkFsFX
">Akila Bharata Hindu Maha Sabha, Salem Tharamangalam Mandal President, Mr. Sivakumar, formally invites THE SPH for the opening ceremony of the Ayodhya Ram Janmabhūmi Temple.
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 21, 2024
Mr. Sivakumar visited KAILASA Salem and presented Akshatha from Ayodhya.
KAILASA thanks Mr. Sivakumar and… pic.twitter.com/2EjhkkFsFXAkila Bharata Hindu Maha Sabha, Salem Tharamangalam Mandal President, Mr. Sivakumar, formally invites THE SPH for the opening ceremony of the Ayodhya Ram Janmabhūmi Temple.
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 21, 2024
Mr. Sivakumar visited KAILASA Salem and presented Akshatha from Ayodhya.
KAILASA thanks Mr. Sivakumar and… pic.twitter.com/2EjhkkFsFX
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இவரைத்தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு இடையே, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்து வரும் நித்தியானந்தா, தனக்கு அழைப்பு வந்ததாகவும், தானும் இவ்விழாவில் பங்கேற்பதற்காக தனது X சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: 10,000 சிசிடிவி, டிரோன் கேமராக்களுடன் உச்சக்கட்ட பாதுகாப்பு
அப்பதிவில், "இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தவறவிடாதீர்கள். அயோத்தி கோயில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இது முழு உலகத்தையும் அலங்கரிக்கும் ஓர் நிகழ்ச்சியாகும். இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், (Supreme Pontiff of Hinduism - அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் சொல் எனக் கூறப்படுகிறது) பகவான் ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவம் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
2 More Days Until the Inauguration of Ayodhya Ram Mandir!
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 20, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Don't miss this historic and extraordinary event! Lord Rama will be formally invoked in the temple's main deity during the traditional Prana Pratishtha and will be landing to grace the entire world!
Having been formally… pic.twitter.com/m4ZhdcgLcm
">2 More Days Until the Inauguration of Ayodhya Ram Mandir!
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 20, 2024
Don't miss this historic and extraordinary event! Lord Rama will be formally invoked in the temple's main deity during the traditional Prana Pratishtha and will be landing to grace the entire world!
Having been formally… pic.twitter.com/m4ZhdcgLcm2 More Days Until the Inauguration of Ayodhya Ram Mandir!
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 20, 2024
Don't miss this historic and extraordinary event! Lord Rama will be formally invoked in the temple's main deity during the traditional Prana Pratishtha and will be landing to grace the entire world!
Having been formally… pic.twitter.com/m4ZhdcgLcm
இதனிடையே, அகில பாரத இந்து மகாசபையின் சேலம் மாவட்டம் தாரமங்கலம் மண்டலத்தின் தலைவர் சிவகுமார் என்பவர் சேலத்தில் உள்ள கைலாச அலுவலகத்தில் நித்தியானந்தாவுக்கு அழைப்பு வைத்துள்ளார். இதையும் நித்தியானந்தா தனது X வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளிவந்ததை அடுத்து தலைமறைவாக இருந்து வருகிறார். தனக்கென 'கைலாசா' என்ற நாட்டையே உருவாக்கியுள்ளதாகவும், தன்னோடு அந்நாட்டில் வசிக்க விரும்புவோருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்பனவாறு பல அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில், நித்தியானந்தா பங்கேற்பதாக பதிவிட்டுள்ளது அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை அயோத்தியின் மன்னர்கள் வீடு திரும்புகின்றனர்.. கங்கனா ரனாவத்