ETV Bharat / bharat

பெங்களூருவில் வாக்குப்பதிவு கடும் சரிவு! தேர்தல் ஆணையம் கூறும் காரணம் என்ன? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

பெங்களூருவில் எதிர்பார்த்த அளவை காட்டிலும் மக்களவை தேர்தலில் வாக்குகள் பதிவாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சட்டப் பேரவை தேர்தலை காட்டிலும் ஏறக்குறைய பாதி வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 2:12 PM IST

பெங்களூரு : நாடு முழுவதும் நேற்று (ஏப்.26) இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் என 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 இடங்களுக்கு நேற்று (ஏப்.26) தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், பெங்களூருவில் குறைந்தளவிலான வாக்குப்பதிவு நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டப் பேரவை தேர்தலை காட்டிலும் மத்திய பெங்களூரு, வட மற்றும் தெற்கு பெங்களூரு தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடந்த 14 தொகுதிகளில் சராசரியாக 69.23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் மத்திய பெங்களூருவில் 52.81 சதவீதமும், வடக்கு பெங்களூருவில் 54.42 சதவீதமும், முறையே தெற்கு பெங்களூருவில் 53.15 சதவீதம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் அக்டந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தொகுதியில் மத்திய பெங்களூருவில் 54.32 சதவீதம், வடக்கு பெங்களூருவில் 54.76 சதவீதம், தெற்கு பெங்களூருவில் 53.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் தற்போது வாக்குப்பதிவு சதவீதம் சரிந்து இருப்பதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம் பெங்களூரு புறநகர் பகுதிகளில் கணிசமான அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு புறநகரில் ஏறத்தாழ 67.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மாண்ட்யா மற்றும் கோலார் தொகுதிகளில் முறையே 81.48 சதவீதம் மற்றும் 78.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : அமேதியில் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் மேலிடம் முடிவு என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.