ETV Bharat / bharat

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு! - NDA alliance leader Narendra Modi - NDA ALLIANCE LEADER NARENDRA MODI

NDA Alliance Leader: தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NDA
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் (Credits - BJP 'X' Page)
author img

By PTI

Published : Jun 5, 2024, 6:49 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளப்தி முர்முவிடம் மோடி வழங்கினார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், நரேந்திர மோடி ஒருமனதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடியின் தலைமையிலான என்டிஏ அரசு ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சுரண்டப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் துன்பப்படும் இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து பாடுபடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ராஜினாமா! குடியரசுத் தலைவரின் வலியுறுத்தல் என்ன? - PM Modi Resign

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.