டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதனிடையே அமலாக்கத்துறை கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை அவரைது மனைவி சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய சுனிதா கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 250 முறை ரெய்து நடத்தியதாகவும், ஆனால் ஒரு ரூபாய் பணத்தை கூட இதுவரை கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் சிறையில் இருந்தவாறே நீர் துறை அமைச்சர் அதிஷிக்கு டெல்லியில் குடிநீர் பிரச்சினையால் மக்கள் திண்டாடாதவாறு தேவையான அளவு நீர் விநியோகத்தை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். டெல்லி மக்கள் மீதான அக்கறை மட்டுமே இதற்கான காரணம் என்று அவர் கூறினார்.
மேலும் மத்திய அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்து டெல்லியை அழிக்க நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பிய சுனிதா கெஜ்ரிவால், மக்கள் தொடர்ந்து துன்பப்படுவதை மத்திய அரசு விரும்புகிறது என்றும் இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் வேதனை அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 250 முறை ரெய்டு நடத்தி ஒன்றையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்தார். மார்ச் 28 ஆம் தேதி அனைத்து உண்மையை நீதிமன்றத்தின் முன் வெளிக் கொணர்வதாக தனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக சுனிதா கூறினார்.
மதுபான ஊழல் பணம் எங்குள்ளது என்பதை அவர் வெளிப்படுத்துவார் என்றும் அதற்கான ஆதாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் அளிப்பார் என்றும் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்து: 6 பேர் பலி? இந்திய மாலுமிகள் இயக்கிய கப்பல் விபத்து! - US Baltimore Bridge Collapse