ETV Bharat / bharat

ஏர் இந்தியா உணவில் இரும்பு பிளேடு.. எப்படி வந்தது? - Blade in Air India Food - BLADE IN AIR INDIA FOOD

ஏர் இந்தியா விமான பயணியின் உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Metal Blade in Air India Food (Credit: X/@MathuresP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 4:32 PM IST

டெல்லி: பெங்களூருவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் ஏர் இந்தியாவின் AI 175 என்ற விமானத்தில் மாதுரஸ் பால் என்ற பயணி பயணித்துள்ளார். பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை பயணி கண்டறிந்து உள்ளார்.

இந்நிலையில், இது குறித்து மதுரஸ் பால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வேகமாக பரவி வருகிறது. அந்த பதிவில், ஏர் இந்தியா விமான பயணத்தின் போது வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை கண்டறிந்தேன். உணவு மென்று சாப்பிடுவதற்கு முன்னதாக அதை கண்டறிந்தேன். அதனால் எந்த வித அசம்பாவிதமும் நிகழவில்லை என மதுர்ஸ் பால் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்து உள்ள ஏர் இந்தியா நிறுவனம், உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், உணவு சப்ளை செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

கடினமான காய்கறிகளை வெட்டும் போது அதன் பிளேடு உடைந்து காய்கறிகளோடு கலந்து இருக்கலாம் என்றும் ஏர் இந்தியாவுக்கு உணவு சப்ளை செய்யும் கேட்டரிங் நிறுவனத்திற்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேற்கு வங்கம் கன்சன்ஜங்கா ரயில் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - West Bengal train accident

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.