ETV Bharat / bharat

கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை! டிடிவி தினகரன் கடும் கண்டனம்..

Karnataka Budget: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டப்படும் என்ற முதலமைச்சர் சித்தராமையாவின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran has condemned the announcement of mekedatu project implement
மேகதாது திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 11:53 AM IST

Updated : Feb 16, 2024, 1:45 PM IST

கர்நாடகா: கர்நாடகாவில் இன்று (பிப்.16) பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா, மேகதாது அணையைக் கட்ட பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் தேவையான அனுமதிகளைப் பெற்று மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்.16) தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, மத்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில், தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம்.

தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், அம்மா நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையைக் காக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளன.

எனவே, டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்து; பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!

Last Updated : Feb 16, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.