மும்பை: கேரள மாநிலம் கோழிகோடுவில் இருந்து பஹ்ரன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அப்துல் முசாவிர் நடுகண்டே என்பவ பயணித்து உள்ளார். நடுவானில் விமானம் சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென இருப்பிடத்தை விட்டு எழுந்த அவர், விமான நிறுவனத்தின் சிப்பந்திகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகே இருந்த அவசரகால கதவை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதை தடுக்க முயன்ற விமான சிப்பந்தியை அவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அருகில் இருந்த பயணிகளையும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன் பின் உடனடியாக சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் மும்பை விமான நிலைய போலீசார் அப்துல் முசாவிர் நடுகண்டேவை கைது செய்தனர். தொடர்ந்து அப்துல் முசாவிர் நடுகண்டே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "கடிகாரத்தின் துல்லியத்தை போல் வாக்கு எண்ணிக்கை செயல்முறை"- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்! - Lok Sabha Election 2024