மும்பை: மகாராஷ்டி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துணை முதலமைச்சர் அஜித் பவார் தலமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சரத் பவார் கோரிக்கை மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், அஜித் பவார் தரப்பை தகுதி நீக்கம் செய்ய மறுத்து, சரத் பவாரின் மனுவை நிராகரித்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் சரத் பவாரை விட அஜித் பவாரின் தரப்பே தனிப் பெரும்பான்மை கொண்டு இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடந்தது உள்கட்சி விவகாரம் என்றும் அதற்காக கட்சியில் இருந்து அஜித் பவார் தரப்பு வெளியேறியதாக கருத முடியாது என்றும் சபாநாயாக ராகுல் நர்வேக்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மக்களவை தேர்தலில் தனித்து போட்டி - ஜம்மு காஷ்மீர் பரூக் அப்துல்லா அறிவிப்பு! இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி?