ETV Bharat / bharat

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக! யாருக்கெல்லாம் வாய்ப்பு? - MAHARASHTRA BJP CANDIDATE LIST

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 99 பேர் கொண்ட இப்பட்டியலில் 13 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

பாஜக சின்னம், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஃபட்னாவீஸ் - கோப்புப் படம்
பாஜக சின்னம், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஃபட்னாவீஸ் - கோப்புப் படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 10:59 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 99 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஃபட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும், சந்திரசேகர் பவான்குலே காம்தி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். அமைச்சர் கிரிஷ் மகாஜன், ஜம்னரில் போட்டியிடுகிறார்.

வாரிசுகளுக்கு வாய்ப்பு: மேலும் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா அசோக் சவான் போகர் தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வேயின் மகன் சந்தோஷ் தன்வே போகர்தான் தொகுதியிலும் களமிறங்க உள்ளனர்.

மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு: நாக்பூர் கிழக்கில் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணா கோப்டே, திரோரா - விஜய் ரஹங்டேல், கோண்டியா -வினோத் அகர்வால், அம்கானில் - சஞ்சய் புரம், ஆர்மோலி -கிருஷ்ணா கஜ்பே என கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ப

பெண் வேட்பாளர்கள்: பாஜக முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள 99 பேரில் 13 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீஜெயா அசோக் சவானைத் தவிர, பேலாபூரில் சிட்டிங் எம்எல்ஏ விஜய் மத்ரேவுக்கும், தஹிசார் தொகுதியில் மனிஷா அசோக் சவுத்ரியும் போட்டியிடுகின்றனர்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தமது முதல் பட்டியலில் பாஜக முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்ட பின் அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.