வைசாலி (பிகார்): ரஷ்ய ராணுவ வீரர்களுக்காக காலணிகளை (ஷு) தயாரிக்கும் பிகாரைச் சேர்ந்த தனியார் காலணி ஏற்றுமதி நிறுவனம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கள்கிழமை (ஜூலை 8) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மூன்றாலது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றபின் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்தப் பயணத்துக்கு முன்பே பிகார் மாநிலத்தைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனம் ஒன்று ரஷ்யாவில் தடம்பதித்துள்ளது.
பிகார் மாநிலம், ஹசாப்பூரில் இயங்கிவரும் Competence Exports Pvt Ltd என்ற தனியார் நிறுவனம் தான், ரஷ்ய ராணுவத்தின் தற்போதைய முதல் சாய்ஸாக உள்ளது. ராணுவ வீரர்களுக்காக இந்நிறுவனம் தயாரிக்கும் பிரத்யேக காலணி அணிந்து கொள்வதற்கு வசதியாகவும், நீண்டநாள் உழைப்பது மட்டும் ரஷ்ய வீரர்களின் இந்த விருப்பத்துக்கு காரணமில்லை. போர்க்களமோ, பனி படர்ந்த இடமோ அல்லது உடம்பை உறைய வைக்கும் கடும்குளிர் பிரதேசமோ எந்த இடத்திலும் வீரர்களின் பாதகங்களை சிரத்தையுமந்காப்பது தான்,. பிகாரின் ஹசாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரிக்கும் ஷுக்களை ரஷ்ய ராணுவம் விரும்பி வாங்குவதற்கு முக்கிய காரணம்.
"-40 டிகிரி செல்சியஸ் என்ற அசாத்தியமான காலநிலைக்கும் தாங்கக்கூடிய, இலகுவான, பிடிமானமுள்ள ஷுக்கள் ரஷ்ய ராணுவத்தின் தேவையாக உள்ளது. இந்த தேவைகளை கருத்தில் கொண்டு நாங்கள் பாதுகாப்பானஷுக்களை தயாரிக்கிறோம்ரஷ்யாவுக்கு ஷுக்களை ஏற்றுமதி செய்வதில், . ஹசாப்பூரில் இருந்து மட்டுமின்றி, இந்திய அளவில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். இந்த காலணி ஏற்றுமதி நாளுக்கு நாள் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார் Competence Exports Pvt Ltd நிறுவனத்தின் பொது மேலாளர் சிவ குமார் ராய்