ETV Bharat / bharat

4ஆம் கட்ட லோக்சபா தேர்தல்; 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவக்கம்..! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 4th Phase: ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

File image of finger inked during voting
வாக்குப்பதிவின் போது விரலில் மை வைக்கப்படும் கோப்புப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:43 AM IST

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவானது 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என மொத்தமாக 96 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (மே 13) நடைபெறுகிறது.

அந்த வகையில், தெலுங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகளிலும்; ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளிலும்; உத்தரப் பிரதேசத்தில் 13 மக்களவைத் தொகுதிகளிலும்; பீகாரில் 5 மக்களவைத் தொகுதிகளிலும்; ஜார்கண்டில் 4 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் 8 மக்களவைத் தொகுதிகளிலும்; மகாராஷ்டிராவில் 11 மக்களவைத் தொகுதிகளிலும்; ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகளிலும்; மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிக்கும்; ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும், ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்குக்கான தேர்தலோடு சேர்த்து 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும்; அதேபோல, ஒடிசாவில் மக்களவைத் தொகுதிகளுக்குக்கான தேர்தலோடு சேர்த்து 4 ஒடிசாவின் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று (மே 13) ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், 1.92 லட்சம் வாக்குச் சாவடிகளில் 17.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதில், 8.97 கோடி பேர் ஆண் வாக்காளர்களாகவும், 8.73 கோடி பேர் பெண் வாக்காளர்களாகவும் மற்றும் 64 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களாகவும் உள்ளனர்.

இதுமட்டும் அல்லாது, 4ஆம் கட்ட தேர்தலில் மொத்தமாக 1,171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 170 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மேலும், 19 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று (மே 13) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள 4 கோடியே 14 ஆயிரத்து 181 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 46 ஆயிரத்து 389 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும், ஆந்திராவில் 12 ஆயிரத்து 438 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் என சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படு, தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய வாணிலை ஆய்வுமையத்தின் கணிப்பின்படி, இன்று (மே 13) 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் வழக்கமான வெப்பநிலையில் இருந்து, கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்றும், வாக்குப்பதிவு நாளில் இந்தப் பகுதிகளில் வெப்ப அலை போன்ற சூழல்கள் இருக்காது என்றும் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருகின்ற மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவுகளும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.