ETV Bharat / bharat

மக்களவை தேர்தல்: மும்முரம் அடையும் "மை" தயாரிப்பு - விரலில் வைக்கப்படும் மையில் இவ்வளவு ரகசியமா?

மக்களவை தேர்தலை முன்னிட்டு மைசூரை சேர்ந்த தனியார் நிறுவனம் வாக்காளர்களின் கைகளில் வைக்க 26 லட்சத்து 55 ஆயிரம் மை பாட்டில்களை வழங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 3:57 PM IST

மைசூரு : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாத நடுபகுதியில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மக்களவை தேர்தலை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையு மாநில தேர்தல் ஆணையங்களோடு இணைந்து இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மக்களவை தேர்தலை சுமூகமாக நடத்தி முடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வாக்கெடுப்பு நாள் அன்று பொது மக்களுக்கு கைகளில் வைக்கப்படும் மை தயாரிப்பு பணி மும்முரம் அடைந்து உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த Mylac என்ற பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தயாரிப்பு நிறுவனம் மை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தல் தொடர்பாக Mylac நிறுவனம் இதுவரை 26 லட்சத்து 55 ஆயிரம் மை பாட்டில்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எளிதில் அழியாத வகையில் தயாரிக்கப்படும் ரசாயன மை, பல்வேறு மாநிலங்களுக்குஇ ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டது Mylac நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகமது இர்பான், ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். மேலும், 10 எம்.எல். என்ற அளவில் அடைக்கப்படும் ஒரு மை பாட்டிலை கொண்டு ஏறத்தாழ 700 வாக்காளர்களின் கை விரல்களில் பூச முடியும் என Mylac நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

மார்ச் 28ஆம் தேதிக்குள் மை பாட்டில்களை தயாரித்து வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், மொத்த 26 லட்சத்து 55 ஆயிரம் மை பாட்டில்களின் விலை 55 கோடி ரூபாய் என்றும் அவர் கூடுதல் தகவல்களை பகிர்ந்து உள்ளார். 1937 ஆம் ஆண்டு நல்வதி கிருஷ்ணராஜ உடையார் என்பவரால் தொடங்க நிறுவனம் அதன்பின் 1947 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கர்நாடக அரசு இந்நிறுவனத்திற்கு மைசூர் லேக் அண்ட் பெயிண்ட் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறது. ஏறத்தாழ 75 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நிறுவனம் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் வார்னீஷ் தயாரிப்பு பணியிலும் இறங்கி விற்பனை செய்து வருகிறது.

இதையும் படிங்க : "இப்படித்தான் உயிர் பிழைத்தோம்"- ராஷ்மிகா மந்தனாவின் கதக்... கதக்.. பயண அனுபவம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.