ETV Bharat / bharat

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு! - Gauri Lankesh Murder Case

மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Etv Bharat
Journalist Gauri Lankesh (ETV Bharat/ File)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 1:37 PM IST

பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அமித் திக்வேகர், கேடி நவீன் குமார், சுரேஷ் எச்எல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகன் நாயக்கிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இதே வழக்கில் கைதான அமித் திக்வேகர், கேடி நவீன் குமார், சுரேஷ் எச்எல் ஆகியோர் தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மூன்று பேரின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அருண் ஷியாம், மதுக்கர் தேஷ்பாண்டே, பசவராஜா சப்பன்னவார் ஆகியோர் வாதிட்டனர்.

மனு நீதிபதி எஸ் விஷ்வஜித் ஷெட்டி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஏறத்தாழ 6 ஆண்டுகளாக மூன்று பேரும் சிறையில் உள்ளதாலும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததையும் குறிப்பிட்ட நீதிபதி மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதே காரணத்தை குறிப்பிட்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகன் நாயக் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையில் 527 பேரை சாட்சியங்களாக போலீஸ் சேர்த்து உள்ளது. இருப்பினும் அவர்களில் வெறும் 90 பேரிடம் மட்டுமே போலீசர் இதுவரை விசாரணை நடத்தி உள்ளனர்.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆர்வலருமான கெளரி லங்கேஷ் தீவிர இடது சாரி கொள்கைகளை பின்பற்றக் கூடியவராக காணப்பட்டார். பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக சித்தாந்தங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து எழுதி வந்தார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்கு பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் அவர் வசித்து வந்தார். அந்த பகுதியில் சென்று கொண்டு இருந்த கெளரி லங்கேஷை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மறித்து அவரை நோக்கி ஏழு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் தோட்டாக்கள் துளைத்து கெளரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கெளரி லங்கேஷ் கொலையை கண்டித்து பெங்களூரு முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை மோகன் நாயக் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது. கொலை நடந்து 7 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் வழக்கு விசாரணை அளவிலேயே உள்ளது.

இதையும் படிங்க: பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை கொடூரக் கொலை! முன்விரோதம் காரணமா? - Bihar Minister Father Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.