ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் கைது செய்தது. இதன் காரணமாக, தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு சிறைக்குச் சென்றார்.
இந்த நிலையில், இவ்வழக்கில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜூன் மாத இறுதியில் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்ததும், சம்பாய் சோரனை முதல்வர் பதவியில் இருந்து விலக செய்துவிட்டு, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதனால் சம்பாய் சோரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
தமது இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அண்மையில் டெல்லியில் முகாமிட்டிருந்த சம்பாய் சோரன், அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தாக தகவல் வெளியானது. இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், அமித் ஷா - சம்பாய் சோரன் சந்தித்து பேசும் புகைப்படத்தை, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா தமது எக்ஸ் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
VIDEO | " i was embarrassed, and that's why i had decided to retire (from politics). however, because of love and support of people of jharkhand, i decided to not to retire from politics. i have seen the struggle during the 'jharkhand andolan'... i thought that i will launch a new… pic.twitter.com/Vlt9H8VADP
— Press Trust of India (@PTI_News) August 30, 2024
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரான சம்பாய் சோரன், ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களுடன் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது மகன் பாபுலால் சோரனும் பாஜகவில் ஐக்கியமானார்.
தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் அஸ்ஸாம் மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வா சோரன் முன்னிலையில் சம்பாய் சோரன் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
இதையும் படிங்க:முஸ்லிம் திருமணங்கள் பதிவு: பழைய சட்டம் ரத்து? புதிய மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!