ETV Bharat / bharat

ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்ய நாளை வரை காலக்கெடு நீட்டிப்பு! - ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2

JEE Main 2024 Session 2 Registration Date Extended: ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

jee-main-2024-session-2-registration-last-date-extended-till-march-4
ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்ய நாளை (மார்ச் 4) வரை காலக்கெடு நீட்டிப்பு..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 8:02 PM IST

சென்னை: தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ள அறிக்கையின் படி, "கூட்டு நுழைவுத் தேர்வு ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2-க்கான விண்ணப்பத்தின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதளம் மூலம் நாளை (மார்ச் 4) தேதி வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, விண்ணப்பத்தை மார்ச் 4 இரவு 10.50 மணி வரை பூர்த்தி செய்வதற்கான நேரமும், கட்டணம் செலுத்துவதற்கு இரவு 11.50 மணி வரையும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை திருத்தம் செய்ய மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கால நீட்டிப்பு ஒரு முறை வாய்ப்பு எனவும், எனவே ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்தவர்கள், இந்த வாய்ப்பை கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தேசிய தேர்வு முககை (NTA) தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 1 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. அமர்வு 1 முடிவுகளுடன், அகில இந்திய தரவரிசையை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிக்கவில்லை. அமர்வு 2 முடிந்த பிறகு, அகில இந்திய தரவரிசை (AIR) பட்டியல் தயாரிக்கும் போது, அமர்வு 1 மற்றும் அமர்வு 2 சிறந்த மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கி வைக்க இருக்கும் திட்டத்திற்குப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.