சாகர் (மத்தியப் பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தின் பந்த்ரி காவல் நிலையத்திற்குபட்ட லக்னாடன்-ஜான்சி நெடுஞ்சாலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கன்டெய்னர் ஒன்று, சென்னையில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் மற்றும் காவலாளி மட்டுமே செல்லும் அந்த கண்டெய்னர் லாரியில், புதியதாக ஒரு இளைஞரை காவலாளி தனக்கு தெரிந்தவர் எனக் கூறி கண்டெய்னரில் ஏற்றியுள்ளதாகத் தெரிகிறது.
பின் கண்டெய்னர் லாரி நரசிங்பூரில் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், திடீரென காவலாளி மட்டும், தனக்குத் தெரிந்த நபர் என ஏற்றிய நபர் ஓட்டுநருக்கு போதைப்பொருள் கொடுத்து வாயையும், கை, கால்களை கட்டி வண்டிக்குள் அடைத்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போதை தெளிந்து கண்விழித்து பார்த்த ஓட்டுநர், கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன்கள் காணாமல் போயிருப்பதையும், கண்டெய்னர் காலியாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளர்.
இதையடுத்து, பந்த்ரி காவல் நிலையத்திற்கு விரைந்த ஓட்டுநர், திருட்டைப் பற்றி புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் அங்கு இருந்த பந்த்ரி காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து லக்னாடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்குமாறு கூறியாதாக, தற்போது இந்த சம்பவத்தை விசாரணை செய்த ஐஜி பிரமோத் வர்மா கண்டறிந்தை அடுத்து, இன்று பந்த்ரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர், ஏஎஸ்ஐ ராஜேஷ் பாண்டே மற்றும் தலைமைக் காவலர் ராஜேஷ் பாண்டே ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து ஐஜி பிரமோத் வர்மா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்வதுள்ள போலீசார், ஆப்பிள் நிறுவன அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கும் மேவாதி கொள்ளை கும்பலுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கனமழை எதிரொலி; ஆந்திரா, தெலங்கானாவில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு!