ஹைதராபாத்: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் இஸ்லாமோஃபோபியாவை (Islamophobia) எதிர்த்துப் போராடுவதற்கான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது இஸ்லாமோஃபோபியாவின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதையும், எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான அச்சம், வெறுப்பு, பாகுபாட்டைத் தூண்டும் அல்லது தீங்கு விளைவிக்கும் கருத்துக்கள் மற்றும் பாரபட்சமான கருத்துக்கள் போன்றவற்றை எதிர்கொள்வதற்கும், அகற்றுவதற்குமான தேவையை இந்த நாள் நினைவூட்டுகிறது.
இஸ்லாமோஃபோபியா தோன்றிய வரலாறு:
2018ஆம் ஆண்டு ஐநா சபை குழு, மார்ச் 15ஆம் தேதியை இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான தினமாக அறிவித்துள்ளது. அதாவது, நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 51 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்த கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூட்டைக் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இஸ்லாமியர்கள் மீது தேவையில்லாத வெறுப்பு, புரிந்துகொள்ளுதல், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அவசரத் தேவையை இந்த நாள் நினைவூட்டுகிறது.
இஸ்லாமோஃபோபியா என்றால் என்ன?:
இஸ்லாமோஃபோபியா என்பது வெறுப்பான பேச்சு, வெறுப்பான குற்றங்கள் மற்றும் அரசியலிலும், கல்வி நிறுவனங்களிலும், சமூகத்தின் இஸ்லாமியர்கள் மீதான தவறான கருத்து சித்தரிக்கப்படுவது ஆகும். இஸ்லாமியர்கள் பெரும்பாலும் எதிர்மறையான அணுகுமுறைகள், நிராகரிப்புகள், பயம் மற்றும் அவமதிப்பு மட்டுமின்றி பொது இடங்களில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படையாகக் கடைப்பிடிப்பதற்காகத் துஷ்பிரயோகம் அல்லது அவமானத்தையும் எதிர்கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, இஸ்லாமியர்கள் குறித்து ஊடக சித்தரிப்புகள், வேலை வாய்ப்பு, பாகுபாடு காட்டுதல் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகின்றன.
இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராட வேண்டும்?:
இஸ்லாமோஃபோபியாவை நிவர்த்தி செய்வதற்காகச் சட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கல்வி போன்றவை உள்ளடக்கிய பல அணுகுமுறைகள் தேவைப்படுகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றுவதன் மூலமாகவும், இந்த வெறுப்புகளுக்கு எதிரான வழக்குகள் மூலம் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும், முஸ்லீம்கள் பற்றிய தவறான நம்பிக்கை இல்லாத உணர்வுகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட பொதுக்கல்வி முன்முயற்சிகளைத் துவங்குவதன் மூலமும் பல அரசாங்கங்கள் இஸ்லாமோஃபோபியாவிற்கு பதிலளித்துள்ளன.
மார்ச் 15ஆம் தேதியை "அனைத்து வகையான இஸ்லாமோஃபோபியாவை அகற்றுவதற்கான சர்வதேச தினம்" என ஐநா சபை (UNGA) OIC (இஸ்லாமிய மாநாட்டின் அமைப்பு) 60 உறுப்பு நாடுகளால் ஆதரவு செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
இந்த தீர்மானம், "பயங்கரவாதகம், வன்முறை மற்றும் தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், இனத்துடனும் இணைக்கப்படக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், "மனிதர்களின் அடிப்படை உரிமைகளான மரியாதை, மதங்கள், நம்பிக்கைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சகிப்புத்தன்மை மற்றும் அமைதி கலாச்சாரத்தை ஊக்குவிக்க உலகளாவிய உரையாடலுக்கு அழைப்பு விடுத்தது.
எந்த ஒரு பாரபட்சத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான மிகச்சிறந்த வழிக் கல்வி ஒன்று தான். பள்ளிகளிலோ, பணியிடத்திலோ அல்லது ஒருவரின் சொந்த சமூகத்திலோ இஸ்லாமோஃபோபியா ஏன் தவறு என்பதற்காகக் காரணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஒவ்வொரு நபருக்கும், மதம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளை நிராகரிப்பதற்கும் மாற்றியமைப்பதற்கு உரிமை உண்டு. ஒவ்வொரு நபருக்கும் வழிபாடு, அனுசரிப்பு, கற்பித்தல் ஆகியவற்றில் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ, பொது அல்லது தனிப்பட்ட முறையிலோ தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கச் சுதந்திரம் உள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!