ETV Bharat / bharat

10 ஆண்டுக்குப் பின்னரும் கோட்டை விட்ட காங்கிரஸ்! ஹரியானா தோல்விக்கு காரணம் என்ன?

உட்கட்சி மோதல், கட்சிக்கு எதிரான அதிருப்தி வேட்பாளர்கள் ஆகியவற்றின் காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சியமைக்க இயவில்லை.

காங்கிரஸ்
காங்கிரஸ் (image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 2:57 PM IST

Updated : Oct 10, 2024, 4:25 PM IST

சண்டிகர்: உள்கட்சி மோதல், கட்சிக்கு எதிரான வேட்பாளர்கள் ஆகியவற்றின் காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சியமைக்க இயவில்லை.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு எதிராக மக்களின் அதிருப்தி அலை இருந்ததால் அந்த ஆட்சியை அகற்றி விட முடியும் என்று காங்கிரஸ் நம்பிக்கையோடு இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளும் காங்கிரஸின் நம்பிக்கைக்கு ஆதரவாகவே இருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தது. பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பூபேந்தர் சிங் ஹூடா, "மாநிலத்தில் நிலவிய சூழ்நிலைக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் முடிவு எங்களுக்கு அதர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது," என்றார்.

மக்களவைத் தேர்தலின் போது பாஜக வசம் இருந்த ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எனவே, காங்கிரஸ் உற்சாகத்தில் இருந்தது. ஹரியானா தேர்தலில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் பிரச்னைகள், அக்னிபாத் திட்டம் ஆகியற்றின் அடிப்படையில் பரப்புரை மேற்கொண்டது.

இதையும் படிங்க : ஹரியானா தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட காங்கிரஸ்

ஆனால், பாஜகவுக்கு எதிரான களத்தில் ஒன்றுபட்டு காங்கிரஸ் கட்சி போராடவில்லை. உட்கட்சி மோதல் உள்ளிட்டவற்றின் காரணமாக பாஜக பலன் பெற்றிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா, பட்டியலின தலைவரான குமாரி செலஜா ஆகியோரிடையேயான ஈகோ பிரச்னை காரணமாக காங்கிரஸ் ஒற்றுமையில் போதாமை இருந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

பாஜகவை பொறுத்தவரை அடிமட்ட அளவில் கட்சி கட்டமைப்பை வலுவாக ஒருங்கிணைத்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே ஹரியானாவில் அதே போன்றதொரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் காங்கிரஸ் தவறி விட்டது. முந்தைய சட்டப்பேரவையில் இருந்த 28 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்தது. அவர்களில் 15 பேர் இந்த தேர்தலில் தோற்று விட்டனர். இந்த விஷயத்தில் பாஜக முந்தைய எம்எல்ஏக்கள் பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. பெரும்பாலான புதுமுகங்களுக்கே பாஜக வாய்ப்பு அளித்தது.

ஷம்ஷேர் சிங் கோகி, பிரதீப் சவுத்ரி, மேவா சிங், சுரேந்தர் பன்வார், தரம் சிங் சோக்கர், அமித் சிஹாக் மற்றும் சிரஞ்சீவ் ராவ் உள்ளிட்ட முந்தைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இப்போது தோற்று விட்டனர். பாதிக்கும் மேற்பட்ட முந்தைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தோற்றதால் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான அதிருப்தியாளர்கள் காரணமாகவும் காங்கிரஸ் மோசமாக பாதிக்கப்பட்டது. அதிருப்தி வேட்பாளர்கள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்ததால் அது பாஜகவுக்கே சாதகமாக முடிந்தது. இதனால் சில இடங்களில் காங்கிரஸ் தோற்க காரணமாக அமைந்தது.

சித்ரா சார்வாரா என்ற காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் அம்பாலா கான்ட் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் அனில் விஜ்ஜை எதிர்த்துப் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் சித்ரா சார்வாரா 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சார்வாரா 52,581 வாக்குகள் மட்டுமே பெற்றார். விஜ் 59,858 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பர்விந்தர் பால் பாரி வெறும் 14,469 வாக்குள் மட்டுமே பெற்றார். இது போல பஹதுர்கர், கல்கா, கோஹானா மற்றும் பல்லப்கர் தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்களால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது.

பரிதாபாத் மாவட்டத்தின் பாலாபாக்ராஹ் தொகுதியில் தற்போதைய பாஜக எம்எல்ஏ மூல் சந்த் சர்மா, தமது போட்டியாளர் சார்தா ரத்தோரை தோற்கடித்தார். ரத்தோர் காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டு தராததால் சுயேட்சையாகப் போட்டியிட்டார். மூல் சந்த் சர்மா 61,806 வாக்குள் பெற்றார். ரத்தோர் 44,076 வாக்குள் மட்டுமே பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நான்காவது இடமே பெற முடிந்தது.

மக்களவைத் தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 8 தொகுதிகளில் ஹூடாவின் தாக்கமே அதிகம் இருந்தது. மேலிடத்தின் ஆதரவில் செல்ஜா, சிர்சா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு தோற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலிலும் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஹூடாவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. செல்ஜா உள்ளிட்ட தலைவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து பேட்டியளித்துள்ள செல்ஜா, "தேர்தல் தோல்வி குறித்த அனைத்து காரணங்களையும் மேலிடம் ஆய்வு செய்ய வேண்டும். தோல்விக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கடினமாக பணியாற்றினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைப்பதை எதிர்நோக்கி இருந்தனர். ஆனால், அவர்கள் அதிருப்தி அடைந்திருப்பது என்னுள் வலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானாவில் வழக்கம் போல என்னால் செயல்பட இயலவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் கட்சி ஆட்சிக்கு வரும் முயற்சிகளுக்கு பாதகம் விளைவித்தவர்களை கண்டறிந்து காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Last Updated : Oct 10, 2024, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.