ஜெய்சல்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பாலைவன பகுதியில் இந்திய விமானப் படையின் விமானம் விபத்துக்குள்ளானது. இந்திய விமானப் படையின் இலகு ரக தேஜஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் பயிற்சிக்காக பயன்படுத்தக் கூடியா இலகு ரக விமானம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானி பத்திரமாக உயிர்பிழைத்த நிலையில், விபத்துக்கான காரணம் என்னவென்று தகவல் தெரிவிக்கப்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.