புதுடெல்லி: தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அணு உலைகள் வடிவமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2024- 25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், அணு சக்தி துறை சார்ந்த முக்கிய அறிவிப்பும் இடம்பெற்றது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், "இந்தியாவின் வளர்ச்சியில் அணு சக்தியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறிய அளவிலான அணு உலைகளை வடிவமைக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அணு சக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி விரைவில் ஒதுக்கப்படும்" என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குடியிருப்புகளுக்கான இலவச மின் திட்டம்: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!