ETV Bharat / bharat

வீட்டில் வைத்து பிரசவம்: பரிதாபமாக பறிபோன தாய்-சேய் உயிர்! கேரளாவில் நடந்தது என்ன? - Kerala Pregnant women death

Kerala Pregnant woman dead in delivery: கேரளாவில் கணவரின் அஜாக்கிரதையால் கர்ப்பிணி மனைவி, சிசுவுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kerala
Kerala
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 12:12 PM IST

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கரக்கமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சமீரா. பாலக்காடை பூர்வீகமாக கொண்ட சமீரா, கணவர் நயாசுடன் கரக்கமண்டபம் பகுதியில் வசித்து வந்து உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சமீராவை, கணவர் நயாஸ் மருத்துவமனையில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

சமீராவை மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் எவ்வளவோ எடுத்து கூறியும் நயாஸ் அவற்றை புறந்தள்ளிவிட்டு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவ வலியால் சமீரா துடிதுடித்து உள்ளார்.

இருப்பினும், சமீராவை நயாஸ் மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் இருந்தே பிரசவம் பார்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் சிறிதி நேரத்தில் சமீரா மயக்கமடைந்து உள்ளார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் சமீராவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

சமீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரும், வயிற்றில் இருந்த சிசுவும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். அதிகளவிலான ரத்தப் போக்கு காரணமாக சமீரா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையடுத்து சமீரா உயிரிழப்பு தொடர்பாக அவர் தங்கி இருந்த வீட்டை சீல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீரா, நயாஸ்க்கு இரண்டாவது மனைவி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீரா - நயாஸ் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ளனர். முன்னதாக தனது பிள்ளைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தக் கூடாது என சுகாதார பணியாளர்களிடம் நயாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.