ETV Bharat / bharat

மனிதர்களுக்கு வழிகாட்டப்போகும் பெண் ரோபோ.. ககன்யானின் முதல் கட்ட திட்டம் இதுதான்! - what is HSFC in tamil

Vyommitra Woman Robot in ahead of ISRO's Gaganyan mission: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள நான்கு வீரர்கள் தெரிய வந்துள்ள நிலையில், அவர்களை முதலில் விண்வெளிக்கு இஸ்ரோ அனுப்பப்போவதில்லை. அதற்கு முன்பாக வியோம்மித்ரா என்னும் பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதை விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 7:26 PM IST

ஹைதராபாத்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் ஆயத்த மற்றும் முதன்மைப் புள்ளியாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. இதன்படி, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக பிரதமர் மோடி, இன்று கேரளாவில் வைத்து அறிவித்தார்.

ககன்யான் திட்டம் என்றால் என்ன? மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியை நோக்கமாகக் கொண்டுள்ள ககன்யான் திட்டத்தின்படி, விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதே தலையாய நோக்கமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மூலம் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதை இஸ்ரோ தளம் உறுதி செய்கிறது.

இவ்வாறு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் 3 மனிதர்களை 400 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், அடுத்த மூன்று தினங்களுக்குள் மூன்று பேரையும் பாதுகாப்பாக தரையிறக்க பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் விண்வெளியில் வீரர்களுக்கு பூமி போன்று வாழ்வதற்குத் தேவையான நிலைகளை உருவாக்குதல், விண்வெளிக் குழுவினர் அவசரகால நேரத்தில் தப்பிப்பதற்குத் தேவையான தளம் ஆகியவற்றை கொடுப்பதில் ககன்யான் திட்டக் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ககன்யான் ஏவுகணை எது? இஸ்ரோவின் நம்பகமான மீண்டும் மீண்டும் பல்வேறு சோதனைகளில் நிரூபிக்கப்பட்ட கனரக லிப்ட் ஏவுகணை, ககன்யான் விண்கல ஏவுகனையாக எல்விஎம்3 (LVM3) ராக்கெட் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் ஆகிய நிலைகளுடன் வடிவமைக்கப்பட்டு, மனித தேவைகளை பூர்த்தி செய்யும் வகையைக் கொண்டுள்ளது. மேலும், HLVM3 ஆனது, குழு எஸ்கேப் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது ஏவுதளத்தில் அல்லது ஏறும் கட்டத்தில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், வீரர்களுடன் க்ரூ மாட்யூல் பாதுகாப்பான தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்கிறது.

ககன்யானுக்கான குழு பயிற்சி: பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சியில், வகுப்பறை பயிற்சி, உடற்தகுதி பயிற்சி, விமான உடை பயிற்சி, ககன்யான் விண்கல அமைப்புகள், பாராபோலிக் வாகனம் மூலம் மைக்ரோ - கிராவிட்டி செயல்முறைகள், ஏரோ-மெடிக்கல் பயிற்சி, மீண்டு வருதல் மற்றும் வாழ்வது தொடர்பான பயிற்சி, காலங்கருதி பறப்பதற்கான பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

வியோம்மித்ரா ரோபாவின் பங்கு என்ன? இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நான்கு விண்வெளி வீரர்கள், உடனடியாக ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட போவதில்லை. மாறாக, ‘வியோம்மித்ரா’ என்னும் பெண் ரோபாவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ ஏற்கனவே திட்டமிட்டு உள்ளது. ஒரு பெண்ணின் தோற்றத்தைக் கொண்ட விண்வெளி ரோபோவான வியோம்மித்ரா, இந்த ஆண்டு இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இம்மாத தொடக்கத்தில் கூறி இருந்தார். இஸ்ரோவின் லட்சியத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு முன்னதாக, இந்த வியோம்மித்ரா பெண் ரோபா விண்வெளிக்கு அனுப்பப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.

வியோம்மித்ரா என்றால் என்ன? இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள வியோம்மித்ராவில் உள்ள ‘வியோம்மித்ரா’ என்பது விண்வெளி என்றும், ‘மித்ரா’ என்பது நண்பர் என்றும் பொருள்படும். இரண்டு சமஸ்கிருத சொற்களிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டுள்ளது. இந்த பெண் தோற்றம் கொண்ட ரோபோ, விண்வெளி அளவுருக்களை கண்காணித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற திறன் கொண்டது. இந்த ரோபோவால் ஆறு பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

HSFC செயல்பாடுகள் என்னென்ன? பெங்களூரில் உள்ள HSFC எனப்படும் மனித விண்வெளி வாகன மையம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. Human Space Flight Centre எனப்படும் இது, ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதை முக்கிய பொறுப்பாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலில் இருந்து இறுதி வரையிலான பணி திட்டமிடல், விண்வெளியில் வீரர்கள் உயிர் வாழ்வதற்கான பொறியியல் அமைப்புகளின் மேம்பாடு, வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்சி மற்றும் நீடித்த மனித விண்வெளிப் பயணங்களுக்கான நடவடிக்கைகளை ஹெச்எஸ்எஃப்சி செயல்படுத்தும்.

மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ், ககன்யானின் முதல் மேம்பாட்டு விமானத்தை செயல்படுத்த, தற்போதுள்ள இஸ்ரோ மையங்களின் ஆதரவை HSFC அளிக்கும். இந்த HSFC ஆனது, இந்தியாவில் உள்ள விண்வெளி மையங்கள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை ககன்யான் திட்டத்திற்காக ஒருங்கிணைக்கும்.

இதையும் படிங்க: விண்வெளி ஆராய்ச்சியில் குவியப்போகும் வேலை வாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.