ETV Bharat / bharat

3 அடி உயரத்தில் மருத்துவர்... திறமைக்கு உயரம் முக்கியமல்ல.. போராடி மருத்துவரான சுவாரஸ்யம்! - Dr Ganesh Baraiya

3 feet tall doctor: குஜராத்தை சேர்ந்த 3 அடி உயரம் உள்ள இளைஞர் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மருத்துவராகி புது மைல்கல் படைத்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 4:44 PM IST

பாவ்நகர் : குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பரையா. 23 வயதான கணேஷ் பரையா உருவக் குறைப்பாடு பிரச்சினை கொண்டவராக காணப்படுகிறார். ஏறத்தாழ 3 அடி உயரமே கொண்ட கணேஷ் பரையா, சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற லட்சியக் கனவை கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்தி வந்து உள்ளார்.

பிளஸ் 2 படிப்பை முடித்த கணேஷ் பரையா, நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி கண்டு தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற எதிர்நோக்கி இருந்து காத்திருந்து உள்ளார். அதேநேரம் கணேஷ் பரையாவின் உயரத்தை குறையாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அவரது எம்.பி.பி.எஸ் கனவுக்கு தடை விதித்தது.

குறைந்த உயரம் காரணமாக அவசர நேரங்களில் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்க முடியாது என்றும் உயரத்தை காரணமாக காட்டியும் இந்திய மருத்துவ கவுன்சில் தன்னை நிராகரித்ததாக கணேஷ் பரையா தெரிவித்து உள்ளார். இதையடுத்து தனது பள்ளி முதல்வர் உள்ளிட்டோரின் உதவியுடன் கணேஷ் பாரையா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில கல்வி அமைச்சர் உள்ளிட்டோரின் கதவுகளை தட்டி உள்ளார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின் படி குஜரத் உயர்நீதிமன்றத்திலும் கணேஷ் பரையா முறையிட்டு உள்ளார். கணேஷ் பரையாவை போல் உடல் பிரச்சினைகளால் மருத்துவ சீட்டு மறுக்கப்பட்ட மூன்று பேர் இணைந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். இருப்பினும் குஜராத் உயர்நீதிமன்றம் மூன்று பேருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூன்று பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு கணேஷ் பரையாவுக்கு மருத்துவ சீட்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் 2018ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான அட்மிஷன் நிறைவு பெற்றதை அடுத்து, 2019 ஆம் ஆண்டு சீட் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தற்போது 23 வயதான கணேஷ் பரையா, பாவ்நகர் அரசு மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை நிறைவு செய்து Sir-T மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். திறமைக்கு வயது, உயரம் என எதுவும் முக்கியம் இல்லை என்ற பொன்மொழிக்கு மற்றொரு சான்றாக கணேஷ் பரையா திகழ்கிறார்.

இதையும் படிங்க : கேரளா முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் மகள் பாஜகவில் இணைய திட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.