டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை), டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை "சங்கல்ப் பத்ரா" பிரதமர் மோடி வெளியிட்டார்.
அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கை 'சங்கல்ப் பத்ரா' -வில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுதிமொழிகள் பின்வருமாறு:-
- 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை அமல்படுத்தப்படும்
- பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
- 2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை
- 3 கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்குவத்து தான் இலக்கு
- 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாகக் கொண்டாடப்படும்
- 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைய ஏற்பாடு
- 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாகக் கொண்டாடப்படும்
- அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு
- 80% தள்ளுபடி விலையில் மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை
- முத்ரா யோஜனா கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்
- தமிழ் மொழியை கௌரவிக்கும் விதமாக திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்
- வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும்
- தமிழ்மொழி வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும்
- இந்தியாவின் கவுரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும்
- மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகளும் இணைக்கப்படுவர்
- இந்தியர்கள் நிலவில் காலடி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்
- நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு நிரந்த அடையாள எண் வழங்கப்படும்
- செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாளில் 'சங்கல்ப் பத்ரா' பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி - BJP MANIFESTO