பனாஜி: அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எட்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சபாநாயகர் ரமேஷ் தவாட்கர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக கோவா முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் கோவா சபாநாயகரிடம் அளித்த மனுவில், "திகம்பர் காமத், அலிக்சோ செக்வேரா, சங்கல்ப் அமோன்கர், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, கேதர் நாயக், ருடால்ப் பெர்னாண்டஸ் மற்றும் ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவி இருப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
அரசியல் சட்டப்பிரிவு 191ன்படி பத்தாவது அட்டவணையின் பத்தி 2ன் படி, 8 ஆவது சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதியை பெற்று வெற்றி பெற்ற அவர்கள் கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேர்ந்திருப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,"என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
கிரிஷ் சோடாங்கரின் மனுவை நிராகரித்துள்ள சபாநாயகர் ரமேஷ் தவாட்கர்,"ஒரு அரசியல் கட்சியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஒருவர், இன்னொரு கட்சியில் சேரும்போது அவர் தகுதி இழப்பு செய்யப்படமாட்டார்," என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்