கொல்கத்தா : மேற்கு வங்கம் மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் பகுதியில் உள்ள டம் டம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 50 குடிசைகள் தீக்கிரையாகின. டம் டம் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு குடிசையில் பற்றிய தீ அடுத்தடுத்து பரவி காட்டுத் தீ போல் மாறி உள்ளது.
ஏறத்தாழ 50 குடிசைகள் வரை தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டுக்கடங்காத தீயின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்ற தகவல் வெளிவராத நிலையில், யாரேனும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மேம்படுத்தப்பட்ட ரோபோக்களை கொண்டு குடிசை பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டதாக மாநில தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் பாஸு தெரிவித்து உள்ளார். தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த அமைச்சர், மக்களவை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணி குறித்து ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க : மக்களவை தேர்தல் 2024: கேரளா, கர்நாடகாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்! - Lok Sabha Election 2024