டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சரிதா விகார் பகுதியில் துக்ளகாபாத்- ஓக்லா இடையே சென்று கொண்டு இருந்த தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ பற்றியது. தீ வேகமாக பரவிய ரயிலின் மற்ற பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து பாதி வழியில் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
-
#WATCH | Delhi: A fire broke out in two coaches of Taj Express between Tughlakabad - Okhla. All passengers are safe: CPRO, Northern Railway
— ANI (@ANI) June 3, 2024
A total of 6 fire tenders were rushed to the site. There is no injury or harm to any person, said DCP Railway pic.twitter.com/GG4417ssJh
இதையடுத்து சம்பவ இடத்திற்கு 6 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் பற்றியை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ரயிலில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இரண்டு பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மூன்றாவது ரயில் பெட்டி பகுதியாக சேதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் தீ பற்றியதுமே அதில் இருந்த பயணிகள் துரித நடவடிக்கையின் மூலம் வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், எப்படி ஓடும் ரயிலில் தீ பற்றியது என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியர்களிடம் அமித்ஷா பேசியதாக குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் கெடுபுடி! - Jairam Ramesh On Amit Shah