ETV Bharat / bharat

குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு: விவகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவரா?

சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்பவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாஸ் யாதவை டெல்லி போலீசார், எஃபிஐ ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தேடிக்கொண்டிருக்கின்றன.

விவகாஸ் யாதவ்(வலது பக்கம் இருப்பவர்), குர்பத்வந்த் சிங் பண்ணுன் (இடது பக்கம் இருப்பவர்)
விவகாஸ் யாதவ்(வலது பக்கம் இருப்பவர்), குர்பத்வந்த் சிங் பண்ணுன் (இடது பக்கம் இருப்பவர்) (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

புதுடெல்லி: சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்பவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாஸ் யாதவை டெல்லி போலீசார், எஃபிஐ ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தேடிக்கொண்டிருக்கின்றன.

குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்வதற்கான சதித்திட்டம் இந்தியாவில் உருவானதாக கூறப்படுகிறது. குர்பத்வந்த் சிங் பண்ணுன் இப்போது கனடா, அமெரிக்கா என இரட்டை குடியுரிமையில் வெளிநாட்டில் வசித்து வருவதால் அவருக்கு எதிரான சதித்திட்டம் என்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்படும் விகாஸ் யாதவ், இந்தியாவில் உள்ள வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்றும் அவர் அமெரிக்காவின் எஃபிஐ புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது? இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ருத்ரா விக்ரம் சிங்கிடம் ஈடிவி பாரத் சில கேள்விகளை முன் வைத்தது. அதற்கு அவர் அளித்த பதில்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவின் சட்ட நடவடிக்கைகள் : "டெல்லியில் கொள்ளை மற்றும் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட விகாஸ் யாதவ் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து அவர் தலைமறைவு ஆகிவிட்டார், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு வழக்கில் இந்திய போலீசாரால் விகாஸ் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டால், முதலில் தமக்கு எதிராக உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

ஒப்படைக்கக்கோரும் கோரிக்கை : விகாஸ் யாதவை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்தால், அப்போது சட்ட சிக்கல் எழும். தற்போதுள்ள இந்தியா-அமெரிக்கா இடையே செயல்படுத்தப்படும் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ்தான் எந்த ஒரு ஒப்படைப்பு கோரிக்கையும் நிறைவேற்றப்படும். ஆனால், இந்த செயல்பாடு என்பது எளிதானதாகவோ அல்லது தானாக நடந்து விடக்கூடிய ஒன்றோ அல்ல. இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ், விகாஸ் யாதவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், தொடர்புடைய ஆவணங்களையும் அமெரிக்கா இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் திருப்தியுற்றால் மட்டுமே ஒப்படைப்பு ஒப்பந்தத்தத்தின் கீழ் அவரை ஒப்படைப்பது குறித்து இந்தியா சார்பில் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

விவகாஸ் யாதவுக்கு எதிராக எஃபிஐ வெளியிட்ட போஸ்டர்
விவகாஸ் யாதவுக்கு எதிராக எஃபிஐ வெளியிட்ட போஸ்டர் (Image credits-AP)

குறிப்பாக, விகாஸுக்கு எதிரான கொலை சதித்திட்டம் தீட்டினார் என்பது போன்ற தீவிரமான குற்ற வழக்குகளில் கட்டாயம் அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஒப்படைத்தல் என்பது மேற்கொள்ளப்படும். ஒருவரை ஒப்படைப்பது என்று நடைமுறைக்கு வரும்போது அதற்கு வலுவான ஆதாரம் தேவை. எனவே, அமெரிக்க அரசு, இந்திய அரசிடம் அதற்கான வலுவான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.

இன்டர்போல் பங்கு : ஒப்படைக்க கோருவது என்பது முதன்மையான ஒரு வழியாகும். அதே நேரத்தில் இன்டர்போல் உதவியை நாடுவது அமெரிக்காவின் இன்னொரு வழியாக இருக்கும். சர்வதேச விமான நிலையங்கள் வழியே யாதவ் தப்பிச் செல்வதைத் தடுக்க எச்சரிக்கை விடுக்கும்படி இன்டர்போல் அமைப்பை எஃபிஐ நாடும். குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தீவிரத்தன்மையை இன்டர்போல் உணர்ந்து கொண்டால், ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும். இதன் பேரில் எந்த ஒரு நாட்டுக்கு யாதவ் பயணம் மேற்கொண்டாலும் அவர் கைது செய்யப்படலாம்.

இதையும் படிங்க : காலிஸ்தான் ஆதரவாளர் பனுன் கொலை முயற்சி விவகாரம்: அமெரிக்கா ஆதாரம் வெளியிடாதது ஏன்? -ரஷ்யா!

இதன் மூலம் அவர் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தப்பி செல்வதை தடுக்க முடியும். இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு வெளியே அவர் கைது செய்யப்படுவதற்கான சூழல் எளிதாகும். எனினும் கூட, அவர் ஒப்படைக்கப்படுவதற்கு மிகவும் கவனமான ஒரு சட்ட ஆய்வு தேவைப்படும். ஒப்படைப்பு என்பது எளிதான உடனடியாக நடக்கக் கூடிய செயல் அல்ல,"என்று ருத்ரா விக்ரம் சிங் கூறினார்.

சர்ச்சைக்குரிய சதித்திட்டம்: அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் தகவலின்படி விகாஸ் யாதவுக்கு எதிரான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானதாகும். இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கு மூளையாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொலைக்காக கூலிப்படையை ஏவுதல், இந்தியாவில் இருந்து சதித்திட்டத்தை செயல்படுத்துதல் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை விகாஸ் யாதவ் மீது சுமத்தியுள்ளது. அமெரிக்கா, கனடா நாடுகளில் அரசியல் ரீதியான கொலைகளை மேற்கொள்ளும் பெரிய திட்டத்தின் கீழ் இந்த சதித்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

விகாஸ் யாதவ் இந்த குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை எதிர்கொள்ளாத நிலையில், அவருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் தூதரக ரீதியாக, அரசியல் ரீதியாக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேட்டி அளித்துள்ள முன்னாள் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, "குற்றச்சாட்டு என்பது ஒரு தண்டனை அல்ல. இதில் நீதிமன்ற செயல்பாடுகள் பின்பற்றப்படும்,"என்று கூறியுள்ளார்.

காளிஸ்தான் தனி நாடு கோரிக்கை: காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு குரல் கொடுப்பவர்களில் குர்பத்வந்த் சிங் பண்ணுன் முதன்மையானவர்.அவரின் இந்த கோரிக்கைதான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அவரை சர்ச்சைக்குரிய நபராக ஆக்கியிருக்கிறது. இதன்காரணமாகவே அவர் கொலை செய்யப்படுவதற்கு குறி வைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

விகாஸ் யாதவ் இந்தியாவில் கைது செய்யப்பட்டால், உள்நாட்டில் உள்ள குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும். அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது பெரும் கேள்விகளில் ஒன்று. இன்டர்போல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அல்லது ஒப்படைக்கப்பட்டாலும் யாதவ் சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் மீதான கொலை சதி குறித்த வழக்கு உலகமே இன்று உற்றுநோக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.