ETV Bharat / bharat

ஏப்.19ல் நாடு முழுவதும் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல்! வேட்புமனுத் தாக்கல் முதல் வாபஸ் வரை முழுத் தகவல்! - Lok Sabha Election - LOK SABHA ELECTION

Lok Sabha Polls: தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகள் என 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 11:59 AM IST

Updated : Apr 3, 2024, 3:24 PM IST

டெல்லி : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இன்று (மார்ச்.20) வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், எந்தெந்த மாநிலங்களில் என்றைக்கும் வேட்புமனு தாக்கலுக்கான நிறைவு நாள் உள்ளிட்ட அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

வரும் மார்ச் 28ஆம் தேதி பீகாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதேபோல், மார்ச் 27ஆம் தேதி அருணாசல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தர காண்ட், மேற்கு வங்கம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

பீகாரில் வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 30ஆம் தேதியும், மற்ற மாநிலங்களில் மார்ச் 28ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 2ஆம் தேதியும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மற்றபடி ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 8 இடங்கள், மத்திய பிரதேசத்தில் 6 இடங்கள் என பல்வேறு மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 7 கட்டங்களாக நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Apr 3, 2024, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.