ETV Bharat / bharat

டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் எம்எல்சி கவிதா கைது! - BRS MLC Kavitha arrested by ED - BRS MLC KAVITHA ARRESTED BY ED

Delhi Liquor Case: டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா எம்எல்சி கவிதா தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின் அவரை கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 6:53 PM IST

Updated : Apr 3, 2024, 3:36 PM IST

ஐதராபாத் : டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகரா ராவின் மகள் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) எம்எல்சியுமான கவிதா தொடர்புடைய இடங்களில் கூட்டாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.

ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை இணை இயக்குநர் தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட ஏறத்தாழ 10 பேர் கூட்டாக சேர்ந்து சோதனை நடத்தி உள்ளனர். கவிதாவின் கைதை கண்டித்து பிஆர்எஸ் கட்சித் தொண்டர்கள் தொடர் கோஷம் எழுப்பினர்.

டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதா மீது மார்ச் 13ஆம் தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் நிவாரணம் கடந்த 13ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா எம்எல்சி கவிதா விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருவதாகவும், விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மன்களை புறக்கணித்து வருவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதி வரை டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக எம்எல்சி கவிதா மீது எந்தவித நடவடிக்கைக் கூடாது என கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் கலால் வரி கொள்கை வகுத்ததில் தனியார் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளித்த புகாரில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க : தேர்தல் பத்திரம்: ரகசியமாக நன்கொடை வழங்கியதா ரிலையன்ஸ்? குவிக் சப்ளை நிறுவனம் யாருடையது?

Last Updated : Apr 3, 2024, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.