அம்ரேலி/குஜராத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சாவர் குண்ட்லா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று (அக்டோபர் 27) மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மாலை 5.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மிதியாலா, தஜாடி, சாவர் குண்ட்லா உள்ளிட்ட கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அம்ரேலியில் உள்ள கம்பாவில் உள்ள தடானியா கிராமத்தில் ரத்தின தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், நிலநடுக்கத்தால் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் ரத்தினக் கலைஞர்கள் நிலநடுக்கத்திற்கு பயந்து அங்கும் இங்கும் ஓடுவதை காணலாம். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
એ ભાગો... ધરતીકંપના આંચકાથી રત્ન કલાકારો ડરના માર્યા ભાગ્યા, CCTV થયા વાયરલ#earthquakes #amreliearthquake #cctvfootage #earthquakevideo #socialmedia
— ETVBharat Gujarat (@ETVBharatGJ) October 27, 2024
#gujaratnewshttps://t.co/I7Tv99jq8w pic.twitter.com/zx1o61NNsE
நிலநடுக்கம் உணரப்பட்ட இடம்: அம்ரேலி மாவட்டத்தின் தாரி, கிர் பந்தக், கம்பா கிர் பந்தக், லத்தி, லிலியா, சவர்குண்ட்லா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அம்ரேலி மாவட்டத்தில் மாலை 5.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. தாரி கிர் கிராமங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தவுடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதையும் படிங்க |
சாவர்குண்ட்லா நகர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். நிலநடுக்கத்தின் தீவிரம் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக காந்திநகர் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.