டெல்லி: ஜெய்த்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று(புதன்கிழமை) அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், பணியிலிருந்த மருத்துவரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றதாகவும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, "சுட்டுக் கொல்லப்பட்டவர் யுனானி மருத்துவர் ஜோவேத் அக்தர் என்பதும், உடலில் காயங்களுடன் வந்த சுமார் 16 முதல் 17 வயதுடைய இருவர் மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு அவரது அறைக்குச் சென்று சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்; இரண்டு முக்கியப் புள்ளிகளை நள்ளிரவில் தூக்கிய சிபிஐ!
இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிலளித்துள்ள டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான செளரப் பரத்வாஜ், "மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மத்திய அரசும், துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் நிர்வாக தோல்வியே இந்த சம்பவத்திற்குக் காரணம்" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
Delhi Police say, " during inquiry it was revealed that two boys, both about 16-17 years of age, came to the nursing home at the hospital. one of them asked to change the dressing of his injured toe. dressing of this boy was also done the previous night in the same hospital.… https://t.co/9cojJBR7EC
— ANI (@ANI) October 3, 2024
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் பணியிலிருந்த மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்