ETV Bharat / bharat

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி எனத் தகவல்! பலர் படுகாயங்களுடன் மீட்பு! - Puri Ratha Yatra - PURI RATHA YATRA

ஒடிசா பூரி ஜெகநாதர் யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல் கூறப்படுகிறது.

Etv Bharat
devotee reportedly dead puri ratha yatra (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 7:49 PM IST

பூரி: ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆண் பக்தர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்ததாக தகவல் கூறப்படுகிறது.

பூரியில் தலத்வாஜ தேர் பகுதியில் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பூரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆண் பக்தர் மட்டும் மூச்சுத் திணறல் அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விஷேஷமான பூரி ஜெகனாநாதர் ஆலய விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ராம் பட பாணியில் தந்தையை கொன்று 2 நாட்கள் ரத்தக் கறையுடன் அருகில் இருந்த மகன்! என்ன நடந்தது? - UP Man Killed Father

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.