ETV Bharat / bharat

டெல்லியில் உச்சம் தொட்ட வெப்பநிலை.. முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்! - Delhi temperature today - DELHI TEMPERATURE TODAY

Delhi heat today: டெல்லியில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

File image
கட்டட வேலை (Credits - ETV Bharat)
author img

By PTI

Published : May 29, 2024, 7:37 PM IST

டெல்லி: நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாத பிற்பகுதியில் இருந்தே தொடங்கிவிட்டது. அதிலும், ஏப்ரல் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக, வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. இதனிடையே, ரீமால் புயல் உருவாகி மழை பெய்தது.

இருப்பினும், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பம் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று அதிகபட்சமாக டெல்லியின் முங்கேஷ்பூர் பகுதியில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே, நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு ஆகும். முன்னதாக, நேற்றைய தினம் வடகிழக்கு டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்டவா கூறுகையில், “டெல்லியின் சில பகுதிகளில் இன்று காலை முதலே வெப்ப காற்று வீசி வருகிறது. அதிலும், ஏற்கனவே மோசமான வானிலை நிலவுகிறது. குறிப்பாக, டெல்லியின் முங்கேஷ்பூர், நரேலா மற்றும் நஜாஃகர் ஆகிய இடங்கள் அதிக அளவிலான வெப்ப காற்று வீசும் இடங்களாக உள்ளன” என்றார்.

மேலும், இது தொடர்பாக பேசிய ஸ்கைமெட் வெதரின் வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் துணை தலைவர் மஹேஷ் பலாவட், “நேரடியாக சூரிய ஒளி விழும் திறந்தவெளி இடங்கள் வெப்பம் மிகுந்து காணப்படுகின்றன. மேற்கு பகுதியில் இருந்து வீசும் வெப்ப அலை, நகருக்குள் வர வர வெப்பநிலை அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது” எனத் தெரிவித்தார். மேலும், தற்போதைய நகரின் மின் தேவை 8 ஆயிரத்து 302 மெகாவாட் ஆக உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை 3 மணி வரை ஊதியத்துடன் கூடிய இடைவேளை விட்டு, வெளிப்புற ஊழியர்களுக்குத் தேவையான தண்ணீர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், முன்னதாகவே மே 20 முதல் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ்-க்கு கீழ் வரும் வரை பிற்பகல் 3 மணி நேரம் இடைவேளை அளிக்க வேண்டும் என அனைத்து தொழில்துறை நிறுவனங்களுக்கும் ஆம் ஆத்மி அரசு அறிவுறுத்தியுள்ளதாக, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுராப் பரத்வாஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 24 மணிநேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.