டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இருவரது நீதிமன்றக் காவலும் நிறைவு பெற்ற நிலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த படி காணொளிக் காட்சி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்றக் காவலையும் மே 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கத்துறை முதல்கட்ட விசாரணை நடத்திய நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கு குறித்து விசாரிக்க கவிதாவை சிபிஐ காவலில் எடுத்து உள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதேபோல் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.
மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளார். இருப்பினும் அவருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆம் ஆத்மி - பாஜக டக் ஆஃப் வார் நிறைவு- நீண்ட போராட்டத்திற்கு கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது! - Arvind Kejriwal Got Insulin