ஹைதராபாத்: இந்த மகளிர் தினத்தில், புரோ கபடி தபாங் டெல்லி அணியின் உரிமையாளராக விளங்கும், ராதா கபூரின் பயணத்தை பார்ப்போம். கபடி லீக் அணியின் முதல் பெண் உரிமையாளரான ராதா கபூர், நியூயார்க்கில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதற்குப் பிறகு, அவர் வடிவமைப்பு துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இத்துறையில் சிறப்பாக செயல்பட்ட பிறகு விளையாட்டுத் துறைக்கு பயணித்தார்.
கபடி லீக் டெல்லி அணியின் முதல் பெண் உரிமையாளரான ராதா கபூர் கூறுகையில், “கபடி ஒரு இந்திய விளையாட்டு. இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாகும். கபடியை உலக அளவில் எடுத்துச் செல்வது எப்படியென்று நாம் சிந்திக்க வேண்டும். நாட்டில் திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். இன்றைய பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆனால், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் கபடி விளையாடுவது சற்று அரிதாகவே காணப்படுகிறது. கபடி என்பது ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத விளையாட்டாகவும் கபடி உள்ளது. கபடியில் ஆண், பெண் என்பது முக்கியமில்லை. என்ன பின்னணி என்பதும் முக்கியமில்லை, திறமையே முக்கியமாக பார்க்கப்படுகிறது. விளையாட்டுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சக்தியில், நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
கிரிக்கெட் மற்றும் பேட்மிட்டனில் நிறுவப்பட்ட அணிகள் வேரூன்றிவிட்டன. பெண்களிடம் அதிக திறமைகள் உள்ளன. அதை சில பள்ளிகள் மீட்டுக் கொண்டு வருகின்றன” என்றார். இதனை அடுத்து புரோ கபடி லீக்கில் பெண்களின் பங்கு குறித்து பேசிய அவர், “என்னைத் தவிர வேறு எந்த அணியிலும் பெண் உரிமையாளர் இல்லை. ஏன் பெண் பிசியோதெரபிஸ்டுகள், பெண் மேலாளர்கள், பெண் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூட இல்லை.
கபடியில் இளம் திறமையானவர்களை வளர்த்து, கபடி லீக்கிற்கான அகாடமியை அமைப்பதே எனது நோக்கம். கபடி விளையாட்டில் பெண்களை ஆர்வமடையச் செய்வதில், தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு, மரியாதை செய்யப்படும் இடமே என் கண்ணோட்டத்தில் சரியான உலகம்” என்றார்.
இதையும் படிங்க: 3 அடி உயரத்தில் மருத்துவர்... திறமைக்கு உயரம் முக்கியமல்ல.. போராடி மருத்துவரான சுவாரஸ்யம்!