ETV Bharat / bharat

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அலறும் காங்கிரஸ் தலைமை! - Delhi Congress chief resign - DELHI CONGRESS CHIEF RESIGN

டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததில் தனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அர்விந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 12:21 PM IST

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்கள் நடைபெற்றன. இந்நிலையில், வரும் மே 7ஆம் தேதி மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களால் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் காங்கிரஸ் பொதுச் செயலாலர் டெல்லி மேலிட பொறுப்பாளர் நிராகரிப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும், டெல்லி காங்கிரஸ் கமிட்டியில் மூத்த நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக காங்கிரஸ் டெல்லி பொறுப்பாளர்கள் தன்னை அனுமதிப்பது இல்லை என்றும், ஊடக பிரிவு தலைவராக மூத்த நிர்வாகியை நியமிக்கக் கோரிய தனது பரிந்துரையும் நிராகரிப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் 150 பிளாக்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாகவும், பிளாக் தலைவர்களை நியமிப்பதற்கு கூட காங்கிரச் பொதுச் செயலாளர் டெல்லி மேலிட பொறுபாளர் தன்னை அனுமதிப்பது இல்ல என கடிதத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்ததில் டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் அதிருப்தியில் உள்ளனர்.

ஆம் ஆத்மி அமைச்சரவையில் உள்ள பாதி பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளது, இருப்பினும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் மேலிடம் கூட்டணி அமைத்ததில் டெல்லி தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் தொடர தனக்கு எந்த காரணமும் இல்லை என கடிதத்தில் அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்து உள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : கர்நாடக சாம்ராஜ்நகர் தொகுதி வாக்குச்சாவடியில் மறுதேர்தல்! வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்ட நிலையில் மறுவாக்குப்பதிவு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.