டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
-
Delhi High Court dismisses CM Arvind Kejriwal's plea challenging his arrest by the Enforcement Directorate in the Excise Policy money laundering case.
— ANI (@ANI) April 9, 2024
ED was in possession of enough material which had led them to arrest Kejriwal. Non-joining of investigation by Kejriwal, delay… pic.twitter.com/i07wwSlJiE
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கக் கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 3ஆம் தேதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் இரண்டு மனுக்களுக்கு பதிலளித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி மீண்டும் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப்.9) இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் படியலிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை சட்ட விதிகளுக்கு முரணாதாக இல்லை என நீதிமன்றம் கருவதுவதாக கூறினார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான தடுப்புக் காவலை சட்டவிரோதமானது எனக் கருத முடியாது என்றும் அமலாக்கத்துறை கைதை சட்ட விதி மீறல் எனக் கூற முடியாது என்றும் கூறினார். மேலும், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பெற்று இருந்த இடைக்கால நிவாரணம் காலாவதியான அடுத்த சில மணி நேரங்களில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: எம்எல்சி கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! - BRS MLC Kavitha Custody Extended