அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் கூட்டம் அயோத்தியில் கட்டுமான குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் இன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
"ஸ்ரீராம ஜென்மபூமி கட்டுமானக் குழுக் கூட்டம் மூன்று நாள்கள் நடைபெற்றன. நேற்று மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பல முக்கியமான விஷயங்களை விவாதித்தோம். எங்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலான கோபுர கட்டுமானப் பணி நேற்று தொடங்கியது. லார்சன் டூப்ரோ, டிசிஇ மற்றும் சிஆர்பிஐ போன்ற நிறுவனங்கள் கட்டுமான பணியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் முறையான விசாரணை நடத்தப்படும்.
இதையும் படிங்க: போலீஸ் என்கவுண்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு!
துணை மின் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், கழிவுநீர் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற சிறிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவை படிப்படியாக அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும். இவற்றின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் அறக்கட்டளையின் பொறுப்பாகும். மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
திட்டமிட்ட கால அட்டவணை இரண்டு, மூன்று மாதங்கள் தாமதமானது. பாதகமான சூழ்நிலைகள் ஏதும் ஏற்படவில்லை எனில், அடுத்த ஆண்டு ஜூலைக்குள் கோபுர கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 90 சதவீத நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேறும் என நம்புகிறேன்." என்றார்.
அயோத்தி ராமர் கோயில் பாரம்பரிய நாகரா முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி, உயரம் 161 அடி. மேலும் கோயிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. கோயில் தூண்கள் மற்றும் சுவர்களில் இந்து தெய்வங்களின் தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. கோயிலின் கீழ் தளத்தில் உள்ள கருவறையில் பகவான் ஸ்ரீராமர் (ராம் லல்லா) குழந்தை வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்