ETV Bharat / bharat

உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து திட்டமிடும் காங்கிரஸ்! - PRIYANKA GANDHI

உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து கட்சியையும் இந்தியா கூட்டணி கட்சிகளுடனான உறவையும் வலுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 2:28 PM IST

புதுடெல்லி: உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து கட்சியையும் இந்தியா கூட்டணி கட்சிகளுடனான உறவையும் வலுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அதீத நம்பிக்கை வைத்த காங்கிரஸ் கட்சி உண்மையில் தோல்வியை தழுவியது. எனவே ஒரு காலகட்டத்தில் உபியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மீண்டும் அங்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக 2027ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சி பல திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு படியாக இப்போது உபியில் கட்சியின் கட்டமைப்பை கலைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே கடந்த 5ஆம் தேதி இரவு உத்தரபிரதேசத்தின் மொத்த கட்சியின் கட்டமைப்பையும் கலைத்தார். நடப்பு ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 80 இடங்களில் 43 தொகுதிகளை கைப்பற்றியது. எனவே, உபியில் அடுத்து 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: "விஜயின் கருத்தில் உடன்பாடில்லை" - விசிக தலைவர் திருமா ரியாக்சன்!

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய உபி மாநிலத்தின் மேலிடப்பொறுப்பாளர் அவிநாஸ் பாண்டே,”புதிய குழுக்கள் உபி மாநிலத்தின் கட்சி கட்டமைப்பை ஆராய்ந்து நிர்வாகிகளை தேர்வு செய்யும். கட்சியை மறுசீரமைக்கும் பணி முடிவடைய சிறிது காலம் ஆகும் என்பதால், இப்போது உள்ள நிர்வாகிகள் தற்காலிகமாக தொடர்வார்கள். வயநாடு எம்பி பிரியங்கா காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு உபியில் சில உத்திகளை கையாண்டார். அதனை அடிப்படையாகக் கொண்டு இப்போது உபியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன,”என்றார்.

அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 6 பிராந்திய செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பிராந்தியம் வாரியாக உள்ளூர் நிர்வாகிகள் தொண்டர்களிடம் விரிவாக ஆலோசனை மேற்கொள்வார்கள். இந்த ஆலோசனையின் போது மேற்கொள்ளப்படும் கருத்துகள் அடிப்படையில் கட்சியில் சீரமைப்பு பணிகள் நடைபெறும். இந்த ஆலோசனையின் அடிப்படையில் நிர்வாகிகள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கட்சியின் மேலிடத்துக்கு அனுப்ப்படும். அதன்பின்னர் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.