ETV Bharat / bharat

காங்கிரஸ் இரண்டவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! முன்னாள் முதலமைச்சர்கள் மகன்களுக்கு வாய்ப்பு! - Congress 2nd Lok Sabha Candidates

Congress Second Candidates list: காங்கிரஸ் கட்சியின் 43 பெயர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கமல் நாத், அசோக் கெலாட் ஆகியோரின் மகன்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 8:01 PM IST

Updated : Apr 3, 2024, 3:27 PM IST

டெல்லி : மக்களவை தேர்தலுக்கான 43 பெயர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத் சந்த்வாரா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிட உள்ளார். முன்னாள் அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் மகன் கவுரவ் கோகாய் ஜோர்கத் மக்களவையில் தொகுதியில் களம் காணுகிறார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.சி வேணுகோபால், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இரண்டாவது கட்ட வேட்பாளர்களை இறுதி செய்து உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அசாம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டாமன் மற்றும் டையு ஆகிய மாநிலங்களில் போட்டியிட இள்ள 43 வேட்பாளர்களை தேர்தல் குழு இறுதி செய்து உள்ளதாக கூறினார். மொத்தம் உள்ள 43 பேர் பட்டியலில் 10 பேர் பொது பிரிவினர், 33 வேட்பாளர்கள் பட்டியல் இனம், பழங்குடி இனம், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

25 வேட்பாளர்கள் 50 வயதுக்கும், 8 வேட்பாளர்கள் 51 முதல் 60 வயதிற்கும், 10 வேட்பாளர்கள் 61 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என கே.சி வேணுகோபால் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தானின் ஜோத்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு போட்டியாக காங்கிரஸ் தரப்பில் கரண் சிங் உச்சிரதா களமிறக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் 8 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அந்த பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 39 மக்களவை வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்காக அறிவிப்பு சீக்கிரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பாஜகவுக்கு 10, ஜன சேனாவுக்கு 21 - சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் திட்டம் என்ன?

Last Updated : Apr 3, 2024, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.