புனே: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் சொந்த ஊர் மகாராஷ்டிர மாநிலம் , புனேவுக்கு அருகே உள்ள கன்ஹேர்சார் கிராமமாகும். இக்கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தி அவரை கௌரவித்துள்ளனர்.
இந்த விழாவில் சந்திரசூட் பேசும்போது, "எங்கள் முன் எப்போதும் நிறைய வழக்குகள் இருக்கும். ஆனால் அவ்வழக்குகளில் தீர்வுக்கு நாம் வருவதில்லை. அயோத்தி ராமஜென்ம பூமி பாபர் மசூதி வழக்கிலும் இதேபோன்ற நிலைதான் நீடித்தது.
அந்த வழக்கு எனது அமர்வின் முன் மூன்று மாதங்கள் விசாரணையில் இருந்தது. அத்தகைய சூழலில் தான், இப்பிரச்னைக்கு சமூகமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று கடவுளின் முன் அமர்ந்து வேண்டினேன். உங்களுக்கு தேவையானாவ் இப்பிரச்னைக்கு ஓர் தீர்வு காணுங்கள் என்று அவரிடம் (கடவுளிடம்) கூறினேன்" என்று சந்திரசூட் நினைவுக்கூர்ந்தார்.
இதையும் படிங்க: நீதிபதிகள் அரசியல்வாதிகளை பாராட்டி பேசினால் என்னவாகும்?- உச்ச நீதிமன்ற நீதிபதி விடுத்த எச்சரிக்கை!
தான் தவறாமல் பிரார்த்தனை செய்வதாக கூறிய தலைமை நீதிபதி, " உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஒரு பிர்சனைக்கு கடவுள் எப்போதும் ஒரு தீர்வை கண்டுபிடிப்பார். என்னை நம்புங்கள்" என்றும் சந்திரசூட் கூறினார்.
முன்னதாக, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீடித்து வந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரத்துக்கு 2019, நவம்பர் 9 ஆம் தேதி தீர்வு கிடைத்தது.
அன்றைய தினம், உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி.யாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கிவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த அரசியல் சாசன அமர்வில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட்டும் அங்கம் வகித்தார்.
கடந்த ஜுலை மாதம், அயோத்தி ராமர் கோயிலுக்கு விஜயம் செய்ய அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.